செய்திகள் :

``கண்ணீர் வேண்டாம் தம்பி'' - கைகள் இன்றி +2 தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு முதல்வர் மருத்துவ உதவி

post image

+2 மாணவ, மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியானது. இதில் மாநில அளவில் மொத்தம் 4,05,472 (96.70%) மாணவிகளும், 3,47,670 (93.16%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

குறிப்பாக அரசுப் பள்ளிகளில் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாவட்ட அளவில், அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 98.82 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

+2 தேர்வில் தேர்ச்சி பெட்ரா மாணவிகள்
+2 தேர்வில் தேர்ச்சி பெட்ரா மாணவிகள்

தேர்ச்சி மாணவர்களுக்கு வாழ்த்துகளும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஊக்கமும் அளித்த முதல்வர் ஸ்டாலின், "பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்!" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மாணவர் கீர்த்திவர்மா

இவ்வாறிருக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வில் இரு கைகள் இன்றி 471 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா, தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து உதவினால் நன்றாகப் படித்து தன்னைப் போன்று இருப்பவர்களுக்கு உதவ முடியும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.

கீர்த்திவர்மாவின் கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலானது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, "கண்ணீர் வேண்டாம் தம்பி! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்." என்று மாணவர் கீர்த்திவர்மாவுக்கு உறுதியளித்திருக்கிறார்.

இரவில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்; ஜம்மு காஷ்மீரில் ஒலித்த அபாய சைரன்; இந்தியா பதிலடி!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

Operation Sindoor: ``15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு'' - கர்னல் சோபியா குரேஷி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் இந்திய ... மேலும் பார்க்க

Operation Sindoor: ``நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கூடாது'' - அனைத்து கட்சி கூட்டத்தில் காங்., திமுக

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது, இந்திய ராணுவம் நேற்று (மே 7) `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்... மேலும் பார்க்க

Doctor Vikatan: பயணத்தின்போது கழிவறைக்கு ஓட வேண்டிய அவசரம்.. பிரச்னையைத் தவிர்க்க வழி உண்டா?

Doctor Vikatan: எனக்கு எங்கே பயணம் செய்தாலும் வெறும்வயிற்றுடன்தான்செல்ல வேண்டும். கொஞ்சமாக ஏதேனும் சாப்பிட்டாலும் பாதி பயணத்தில் கழிவறைக்கு ஓடும்படியானஅவசரநிலை ஏற்படும். இதனால் கழிவறை வசதியில்லாத பயணங... மேலும் பார்க்க

Doctor Vikatan: எல்லோருக்கும் விரதம் அவசியமா, விரதம் முடித்ததும் என்ன சாப்பிட வேண்டும்?

Doctor Vikatan: விரதம் இருப்பது என்பது உண்மையிலேயே உடலுக்கு நல்லது செய்யுமா அல்லது உடலை பலவீனமாக்குமா? விரதமிருப்பதால் உடல் டீடாக்ஸ் செய்யப்படும் என்பது உண்மையா? விரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும்போத... மேலும் பார்க்க

Doctor Vikatan: 30 வயதில் திடீரென ஏற்பட்ட ஞாபக மறதி; சாதாரண பாதிப்பா, பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என்நண்பனுக்கு 31 வயதுதான் ஆகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அவன் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தது. எந்த விஷயத்தைக் கேட்டாலும் நினைவில்லை என்றான். அவனுக்குகுடிப்பழக்கம் இல்லை. இரண்டு ... மேலும் பார்க்க