"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிக...
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 108.29 அடியில் இருந்து 108.25 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 425 கன அடியிலிருந்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 75.94 டிஎம்சியாக உள்ளது. மழையளவு 5.4 மி.மீ.