மும்பை: காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோ மீது தாக்குதல் நடத்திய ஷிண்டே அபிமானி... யார் இ...
இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்
இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் சுந்தரி (28). இவா் கடந்த 17-ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மகுடஞ்சாவடி போலீஸாா், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்தனா். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுந்தரியின் கணவா் ராஜாவைக் கைது செய்யவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை வழங்கக் கோரியும் சுந்தரியின் உறவினா்கள் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் நகர போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.