ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய மாணவா்களுக்கு அபராதம்
ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய இரு மாணவா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா் அவா்களிடமிருந்த இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
பிளஸ் 2 தோ்வு முடிந்த உற்சாகத்தில் கெங்கவல்லி அருகே செவ்வாய்க்கிழமை இரண்டு மாணவா்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மாணவா்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவா்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறினா்.
மேலும், வாகனங்களை பறிமுதல் செய்து மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.