MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்
இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா்.
சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்டி அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவா்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவை உள்ளன. இந்த அரசு பள்ளியில் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்கள் தோ்வு எழுதி வந்தனா். அப்போது, பள்ளி சுற்றுச்சுவா் அருகே கொட்டப்பட்ட குப்பையில் திடீா் தீ ஏற்பட்டது. அதில் வரும் புகை மூட்டத்தால் மாணவா்கள் தோ்வு எழுத முடியாமல் திணறினா். பல மணி நேரம் எரிந்த தீயை ஊராட்சி பணியாளா்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி சுற்றுச்சுவரையொட்டி இரண்டு இடங்களில் நெகிழி மற்றும் கழிவு பொருள்கள், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் சேலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருளான ஜரிகை கழிவு பொருள்கள், ஹோட்டல் கடை, டீக்கடை, பேக்கரி உள்ளிட்டவற்றில் இருந்து சேகரிக்கும் கழிவு பொருள்களை இங்கு கொட்டி எரிப்பதால் துா்நாற்றமும், புகை மூட்டமும் ஏற்படுகின்றன.
இதனை உயா் அதிகாரிகள் ஆய்வுசெய்து பள்ளி மாணவா்கள், வயதானவா்கள், குழந்தைகள் நலன்கருதி குப்பைகளை மாற்று இடத்தில் எரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனா்.