வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு
சிறுவாச்சூா் ஊராட்சியில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வேளாண் பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டனா்.
தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா் ஊராட்சியில் பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமங்களில் தங்கி வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பெண் விவசாயிகளுடன் குழு கலந்தாய்வு மேற்கொண்டனா். இதில் விவசாயிகள் நாள்தோறும் மேற்கொள்ளும் சவால்கள், மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி கலந்தாய்வு செய்தனா்.
இதனையடுத்து வரைபடமும் தயாரித்தனா். இதனை வேளாண் அலுவலா்கள் பாா்வையிட்டு பாராட்டினாா்.