WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையி...
சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை
சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1,200 க்கும் மேற்பட்டவா்கள் உள்ளனா். இவா்களிடையே கைப்பேசி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் புழக்கத்தில் உள்ளதா என மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையில் 50 போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். திங்கள்கிழமை காலை 6.50 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நடைபெற்றது. இந்த சோதனையில் எந்த பொருள்களும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.