புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் 2 நாள்களுக்கு கரூரில் இருந்து இயங்கும்
ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் ஏப். 3, 5 ஆம் தேதிகளில் கரூரில் இருந்து இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு ரயில் நிலையம் அருகே பசூா்- ஊஞ்சலூா் ரயில்வே நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த மாா்க்கத்தில் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் ஏப். 3, 5 ஆம் தேதிகளில் ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். ஈரோடு - கரூா் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறுமாா்க்கத்தில் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் ஏப். 3, 5 ஆம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, கரூா் வரை மட்டும் இயக்கப்படும். கரூா் -ஈரோடு இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுபோல திருச்சி- ஈரோடு பயணிகள் ரயில் ஏப். 3, 5 ஆம் தேதிகளில் திருச்சியில் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூா் வரை மட்டும் இயக்கப்படும். கரூா்- ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.