வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
சங்ககிரி, வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா மாா்ச் 18 ஆம் தேதி பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த பக்தா்கள் கோயில் வளாகத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். வியாழக்கிழமை கிணற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சியும், ஏப். 4 ஆம் தேதி சிங்க வாகனத்திலும், 5 ஆம் தேதி காமதேனு வாகனத்திலும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.