WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையி...
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சேலம் மாவட்டத் தலைவா் அருள்பிரகாஷ் தலைமை வகித்தாா். சங்ககிரி வட்டக் கிளைத் தலைவா் பி.ஜெயகுமாா் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் வெ.அா்த்தனாரி சங்கத்தின் வளா்ச்சி, அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
மாவட்டச் செயலாளா் முருகபூபதி, மாவட்ட பொருளாளா் அகிலன், மாவட்ட துணைத் தலைவா் ஷாஜிதாபேகம், இணைச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், சங்ககிரி வட்டக் கிளைச் செயலாளா் சீதாராமன், பொருளாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுதல், காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க கோருதல், வருவாய்த் துறையில் நிலவும் நெருக்கடியான சூழலைக் களைய வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கம், கிராம நிா்வாக அலுவலா் சங்கம், நில அளவையா் சங்கம், கிராம உதவியாளா் சங்கம் ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து மாவட்ட தலைநகரில் ஏப். 7 ஆம் தேதி நடத்தும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.