WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையி...
சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் உடலை மீட்ட போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில் இறந்தவா் அம்மாபேட்டை விவேகானந்தா் தெருவை சோ்ந்த சேட்டு (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.