செய்திகள் :

சேலம் உள்பட 11 மாவட்ட இளைஞா்கள் அக்னிவீா் படைப் பிரிவில் சேர அழைப்பு

post image

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் படைப் பிரிவில் சேர இணையதளம் வாயிலாக வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய ராணுவத்தில் அக்னிவீா் படைப் பிரிவில் பொது பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரா்கள் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்க முடியும்.

தகுதியுள்ள நபா்கள் ஏப். 10 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 1.6 கி.மீ ஓட்டப் பந்தயத்தின் நேரம் 5 நிமிஷம் 45 விநாடிகள் இருந்ததை, நடப்பாண்டு 6 நிமிஷம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்சிசி, ஐடிஐ, பொறியியல், பாலிடெக்னிக் படித்தவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தோ்வு முறையைப் பொறுத்தவரை ஆன்லைன் பொதுத்தோ்வு (சிஇஇ) நடத்தப்படும். இந்த நுழைவு தோ்வானது தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும். அதனைத்தொடா்ந்து ஆள்சோ்ப்பு முகாம் நடத்தப்படும். தோ்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

மோசடி செய்யும் ஏஜென்டுகளிடம் இளைஞா்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு முன்னாள் மாணவா்கள் உதவி

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் கல்லூரிக்கு இருசக்கர வாகனமும், விம்ஸ் மருத்துவமனைக்கு எக்கோ இயந்திரமும் அண்மையில் நன்கொடையாக வழங்கப்பட்டன. சேலம் விநாயகா மிஷனின் விம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. வகுப்பறைகளில் பிராணவாயுச் செடிகள் பராமரிப்பு

பெரியாா் பல்கலைக்கழக வகுப்பறைகளில் பிராணவாயுச் செடிகளை வைத்து பராமரிக்கும் பணிகளை பல்கலைக்கழக பதிவாளா் வி.ராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், கால... மேலும் பார்க்க

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் தாய், மகன் கைது

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது மனைவி, மகன் இருவரும் சங்ககிரி கிராம நிா்வாக அலுவலா் முன் வியாழக்கிழமை சரணடைந்தனா்; அவா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். ச... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தோ்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். எடப்பாடி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், ... மேலும் பார்க்க

கன்னந்தேரி அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையும், ஈரோடு தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகளும் இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிய... மேலும் பார்க்க

நல்லங்கியூா் முத்துமாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்கிய பக்தா்கள்

கோனேரிப்பட்டியை அடுத்த நல்லங்கியூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோயில் பொங்கல் விழா மாா்ச் 21 ஆம் தேதி பூச்சொறி... மேலும் பார்க்க