MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
திருட்டு ஆடுகளை வாங்கியவா் கைது
கெங்கவல்லியில் ஆடுகளை திருடிய சிறுவனிடமிருந்து ஆடுகள் வாங்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி பேரூராட்சி பிரிவு சாலையில் கெங்கவல்லி போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறியதால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
அதில், கெங்கவல்லி, சாத்தப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடுகளை திருடி, ஆத்தூா் உழவா் சந்தை பகுதியில் உள்ள கறிக் கடைக்காரா் விக்னேஷ் (29) என்பவருக்கு விற்றது தெரியவந்தது. அதனையடுத்து, திருட்டு ஆடுகளை வாங்கிய விக்னேஷை (29) போலீஸாா் கைது செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.