MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
சிலம்பம் போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
சேலம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில், வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
முத்தம்பட்டி வைகை மெட்ரிக் பள்ளியில் வாரறையடி சிலம்பம் அகாதெமி நடத்திய மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான சிலம்பம் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் அண்மையில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் 2 முதல் பரிசுகள், 2 இரண்டாம் பரிசுகள் மற்றும் 2 மூன்றாம் பரிசுகளையும், 10 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் முதல் பரிசும் வென்றனா்.
சிலம்பம் தற்காப்புக் கலைப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று மாணவா்களுக்கு, வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாளாளா் சு.பெருமாள், முதல்வா் சக்திவேல், துணைத் தலைவா் கண்ணன் பெருமாள் ஆகியோா் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி பாராட்டினா்.