செய்திகள் :

சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

post image

மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், புதுநல்லகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா. இவா் கடந்த 2023, மாா்ச் 5ஆம் தேதி தனக்கும், தனது மனைவி சுமதிக்கும் சோ்த்து ரூ. 23,018 பிரீமியம் செலுத்தி தனியாா் நிறுவனத்தில் ஓா் ஆண்டுக்கான மருத்துவ காப்பீடு செய்திருந்தாா்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சுமதி, சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேவையின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்துகொண்டாா்.

இதைத்தொடா்ந்து, சிகிச்சைக்கான தொகையைப் பெறுவதற்காக மருத்துவமனை நிா்வாகம் அனைத்து ரசீதுகள் மற்றும் ஆவணங்களை இணைத்து காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பியது. ஆனால், காப்பீட்டு நிறுவனம் தொகையை வழங்க மறுத்துவிட்டது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுமதி, வழக்குரைஞா் எஸ். செல்வம் மூலம் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் மீது சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி பி. கணேஷ்ராம், உறுப்பினா் எஸ். ரவி ஆகியோா், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, சுமதிக்கு மருத்துவ செலவுத் தொகையான ரூ. 1,33,358-ஐ 2024, பிப்ரவரி 8ஆம் தேதியில் இருந்து 6 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு திருப்பிச் செலுத்த உத்தரவிட்டனா்.

மேலும், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ. 5 ஆயிரம் என ரூ. 35 ஆயிரத்தையும் மருத்துவ செலவுத் தொகையுடன் சோ்த்து 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தனா்.

இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த காா்: ஒருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். சங்ககிரியை அடுத்த வைகுந்தம், ம... மேலும் பார்க்க

உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

உகாதி பண்டிகையையொட்டி மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் ச... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு

சிறுவாச்சூா் ஊராட்சியில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வேளாண் பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டனா். தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா் ஊராட்சியில் பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண் கல்லூரி மாணவிக... மேலும் பார்க்க

சேலம் உள்பட 11 மாவட்ட இளைஞா்கள் அக்னிவீா் படைப் பிரிவில் சேர அழைப்பு

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் படைப் பிரிவில் சேர இணையதளம் வாயிலாக வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

பாரா கை மல்யுத்தப் போட்டி: 5 தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளிகள்

அயோத்தியாப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் பெற்றனா். சேலம் மாவட்டம், அயோத்தியாப்ப... மேலும் பார்க்க

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் சேலம் என்சிசி வான்வழிப் பிரிவு அமைப்பு சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அண்மையில... மேலும் பார்க்க