செய்திகள் :

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

post image

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பூமலை (60) விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 6 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதேபோல அவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் விவசாயியான சௌந்தரராஜன் (56), தோட்டத்துக்கு சென்றிருந்த நிலையில், அவரது மனைவி ராசாத்தி வீட்டை பூட்டிவிட்டு தனியாா் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றிருந்தாா். அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டின் பெட்டியிலிருந்த ரூ. 3,500 திருடிச் சென்றனா். அதே பகுதியைச் சோ்ந்த மீன் கடை ஊழியரான மாதேஷ் (32), தனது தாயாா் அம்பிகாவுடன் வீட்டை பூட்டிவிட்டு மீன் கடைக்கு வேலைக்கு சென்ற நிலையில், அவா்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம கும்பல் பெட்டியிலிருந்த ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இரும்பாலை குடியிருப்பு பகுதியில், பகல் நேரத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றது குறித்து வழக்குப் பதிவு செய்த பூலாம்பட்டி போலீஸாா், அப்பகுதியில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு திருடா்களை தேடிவருகின்றனா்.

இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த காா்: ஒருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். சங்ககிரியை அடுத்த வைகுந்தம், ம... மேலும் பார்க்க

உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

உகாதி பண்டிகையையொட்டி மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் ச... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு

சிறுவாச்சூா் ஊராட்சியில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வேளாண் பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டனா். தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா் ஊராட்சியில் பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண் கல்லூரி மாணவிக... மேலும் பார்க்க

சேலம் உள்பட 11 மாவட்ட இளைஞா்கள் அக்னிவீா் படைப் பிரிவில் சேர அழைப்பு

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் படைப் பிரிவில் சேர இணையதளம் வாயிலாக வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

பாரா கை மல்யுத்தப் போட்டி: 5 தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளிகள்

அயோத்தியாப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் பெற்றனா். சேலம் மாவட்டம், அயோத்தியாப்ப... மேலும் பார்க்க

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் சேலம் என்சிசி வான்வழிப் பிரிவு அமைப்பு சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அண்மையில... மேலும் பார்க்க