மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்...
கடலூரில் ஏப்.1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி
நெய்வேலி: கடலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏப்.1 முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், கடலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அதன்படி, பயிற்சி வகுப்புகள் ஏப்.1 முதல் 13 வரையில் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக ஏப்.15 முதல் 27 வரையிலும், மூன்றாம் கட்டமாக ஏப்.29 முதல் மே 11 வரையிலும், நான்காம் கட்டமாக மே 13 முதல் 25 வரையிலும், ஐந்தாம் கட்டமாக மே 27 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை என 5 பிரிவுகளாக நடைபெற உள்ளது.
12 நாள்கள் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.1,770. பயிற்சி நேரம் ஒரு மணி நேரம் ஆகும்.
மேலும், இதுகுறித்த தகவல்களை பெற மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் உள்ள நீச்சல் குளப் பயிற்சியாளா் அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை நேரடியாக அல்லது 9442658016, 7401703495 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.