"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திரு...
மதுப் புட்டிகள் விற்றவா் கைது
தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் பெருமாள் (50). இவா், தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்று கொண்டிருந்தாா்.
இதையடுத்து, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று அவரைக் கைது செய்தனா். இவரிடமிருந்து 50 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.