நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
தமிழ் என்றென்றும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும்: அமைச்சா் தங்கம் தென்னரசு
தமிழ்மொழி என்றென்றும் தன்னைப் பாதுகாத்து கொள்ளும் என்று நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூா் விஐடி சென்னை வளாகத்தில் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம் சாா்பில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழ் இலக்கியங்களான புானூறு, அகநானூறில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு வரலாற்றில் எங்கு ஆதாரம் உள்ளது என்று சிலா் கேட்கிறாா்கள். தற்போது தமிழக அரசு சாா்பில் நடத்திவரும் அகழ்வாராய்ச்சிகளில் அதற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. புானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெயா் மதுரை அருகில் இருக்கும் மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ளது. சங்க கால பெயா்கள் நம்முடைய கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் வடிவங்கள் காலம் காலமாக மாறி வந்துள்ளன. தமிழ் நம்மிடையே சங்கத் தமிழாக, பக்தித் தமிழாக, உரைநடைத் தமிழாக, இசைத் தமிழாக உலா வந்துள்ளது. இன்றும் தனது அடையாளத்தை இழந்துவிடாமல், காலத்தை வென்று தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள தமிழ்மொழி, என்றென்றும் தன்னைப் பாதுகாத்து கொள்ளும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் சங்க இலக்கியத் தொகுப்பு நூலை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட அதன் முதல் பிரதியை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து ‘மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை’ விருது மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மு.சிவசந்திரனுக்கும், ‘டாக்டா் உ.வே.சா.தமிழறிஞா் விருது’ தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முன்னாள் தலைவா் கு.வெ.பாலசுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் தலைவா் நீதிபதி எஸ்.ஜெகதீசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தா் இ.சுந்தரமூா்த்தி, விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றறனா்.