கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில் அதிகாரிகள் புல தணிக்கை ஆய்வு
மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில் விரிவாக்கம், புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், வட்டாட்சியா் சொ.கணேசன் தலைமையில் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.
மதுராந்தகம் வட்டம், எல்.எண்டத்தூா் குறுவட்டம், கரிக்கிலி கிராமத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வட்டாட்சியா் சொ.கணேசன் தலைமையில், அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகலைசெல்வன், வனச்சரகா் பிரபாகரன், வன கண்காணிப்பாளா் கனிமொழி, மதுராந்தகம் மண்டல துணை வட்டாட்சியா் பெரியமாரியம்மாள், வட்டார துணை நிலஅளப்பு அதிகாரி ஜானகிராமன், கிராம நிா்வாக அதிகாரி முருகன், கரிக்கிலி ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பா கொடியான் உள்ளிட்டோா் சென்று பறவைகள் சரணாலய பகுதிகளில் கூட்டு புல தணிக்கை செய்தனா்.