செய்திகள் :

தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப மறுத்த மகன்; மாமியாரை அடித்த மனைவி; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வசிப்பவர் விஷால். இவர் தனது மனைவி மற்றும் அம்மா சரளாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

விஷாலிடம் அவரது தாயாரை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று விஷால் மனைவி நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால், விஷால் அதற்குச் சம்மதிக்கவில்லை.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வழக்கம் போல் இதே பிரச்னையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் விஷாலின் மனைவி தனது தந்தை மற்றும் சகோதரனுக்கு போன் செய்து உடனே வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.

அடுத்த சிறிது நேரத்தில் விஷால் மனைவி வீட்டில் இருந்து அவரது மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோர் சிலரை அழைத்துக்கொண்டு விஷால் வீட்டிற்குள் நுழைந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் விஷாலை அவரது மாமனார் அடித்து உதைத்தார். அவருடன் வந்தவர்களும் விஷாலை அடித்தனர். இதை விஷால் தாயார் தடுக்க முயன்றார். இதனால் அவரையும் விஷால் மனைவியின் உறவினர்கள் அடித்து உதைத்தனர்.

அந்நேரம் விஷால் மனைவி மாடியில் இருந்து இறங்கி வந்து விஷால் தாயார் முடியைப் பிடித்து இழுத்து அவரை அடித்து உதைத்தார். படிக்கட்டில் ஏறிச்செல்வதற்கு முன்பு கூட விஷால் தாயார் முகத்தில் ஓங்கி குத்திவிட்டு விஷால் மனைவி சென்றார்.

விஷால் மகன் தனது பாட்டியைக் காப்பாற்ற முயன்றான். ஆனால் முடியவில்லை. விஷாலை அக்கும்பல் தெருவில் வைத்தும் அடித்து உதைத்தது.

வீட்டில் நடந்த காட்சி வீடியோவில் பதிவாகி இருந்தது. அக்காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இது குறித்து விஷால் தாயார் சரளா கூறுகையில், ''என்னைத் தலைமுடியைப் பிடித்து இழுத்து தெருவில் வைத்து அடித்து உதைத்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களைத் தடுத்தனர். என்னைக் கடுமையாகச் சித்ரவதை செய்தனர். எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எனவே பயத்தில் வீட்டில் இருந்து விலகி இருக்கிறோம்'' என்றார்.

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம்

மருமகள் அடித்ததில் சரளாவின் முகம் வீங்கி இருந்தது. இது குறித்து விஷால் கூறுகையில், ''எனது மாமியார் குடும்பம் எங்களது வீட்டைப் பறித்துக்கொண்டது. வீடு கோடி ரூபாய் மதிப்புடையது. அவர்கள் வீட்டைப் பூட்டிச்சென்றுவிட்டதால் நாங்கள் அனாதையாகி இருக்கிறோம்.

என்மீதும், எனது தாயார் மீதும் பொய் வழக்குப்பதிவு செய்வேன் என்று எனது மனைவி என்னை மிரட்டுகிறார். மீரட்டில் நடந்த கொலை போன்று என்னையும், எனது தாயாரையும் கொலை செய்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது'' என்றார்.

பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் போலீஸில் புகார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு; போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாடை கட்டி, ஒப்பாரி போராட்டம் நடத்திய மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு பகுதியை சேர்ந்தவர் தீர்க்கரசு (54). விவசாயியான இவர் தனது நிலத்தை கிரயம் செய்து கொடுத்து, திருகுமார் என்பவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணம... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்பிலான நிலம் மோசடியா? - போராட்டத்தில் விவசாயிகள்- நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வள்ளிபுரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான 2.97 ஏக்கர் நிலம் மோகனமூர்த்தி, சரவணக்குமார் ஆகிய சகோதரர்கள் இருவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

`மேடம், தம்பியை விட்டுருங்க ப்ளீஸ்'- போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு துர்கா (31), மேனகா (29), கிருத்திகா (27), தினேஷ் (25) என நான்கு பிள்ளைகள். இந்த நிலையில் மது விற்பனை தொடர்ப... மேலும் பார்க்க

`பொம்மை தரேன்’ - 10 வயது சிறுமி, சிறார்வதை செய்யப்பட்டு 6வது மாடிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்

மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இரவு திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. உடனே கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியில் வந்து என்னவென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். இதில் 10 வய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மக்கள் ஏமாந்தது அவர்களுக்கே தெரியவில்லை!’ - `கோ ஃப்ரீ சைக்கிள்’ மோசடி குறித்து போலீஸ்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட `கோ ஃபிரீ சைக்கிள்’ (Go Free Cycles) என்ற சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தன்னுடைய அலுவலகத்தை திறந்தது. அதே வேகத்தில், `புதுச்சேரி வரும் சுற்ற... மேலும் பார்க்க

கோவை: பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 2 ஆண்கள்; விசாரணையில் வெளியான பின்னணி என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (54) மற்றும் மகேஷ் (45). இருவரும் இணைந்து கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாள்களாக பேக்கரி திறக்கப்படவி... மேலும் பார்க்க