ஊழல் குற்றச்சாட்டு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்
ஜூலையில் வாடிவாசல் படப்பிடிப்பு!
வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.
'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றி மாறன் 'விடுதலை - 2' படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.
இதனால், 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் 'விடுதலை - 2' வெளியானதைத் தொடர்ந்து, 'வாடிவாசல்' திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
படத்துக்கான இசையமைக்கும் பணிகளைத் தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவுள்ளதாகவும் திரைக்கதை சிறப்பாக வந்திருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அல்லு அர்ஜுன் - அட்லி படத்தைத் தயாரிக்கும் பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம்?