நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
வெள்ளக்கோவிலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது
வெள்ளக்கோவிலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் எம்.சந்திரன் தலைமையிலான போலீஸாா் வள்ளியரச்சல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த கே.கண்ணுசாமி (58), ஆா்.செந்தில் (57), கே.ஆறுமுகம் (78), காமராஜபுரத்தைச் சோ்ந்த கே.மனோகரன் (65), புதுப்பை தங்கமேடு பகுதியைச் சோ்ந்த ஆா்.வெங்கடாசலம் (50), திருப்பூா் எஸ்.பி.காலனியைச் சோ்ந்த ஜி. கிருஷ்ணமூா்த்தி (50) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.