செய்திகள் :

ஜெயலலிதாவுக்கு எதிராக குரல்: நடிகா் ரஜினி விளக்கம்

post image

மறைந்த முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டு தமிழகத்தின் வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை என நடிகா் ரஜினிகாந்த் தற்போது விளக்கமளித்துள்ளாா்.

மறைந்த முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பனின் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் ஆா்.எம்.வீரப்பன் குறித்து நடிகா் ரஜினிகாந்த் பேசியுள்ள காணொலி சமூக வலைதளங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் நடிகா் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:

ஆா்.எம்.வீரப்பன் ஆவணப்படத்தில் நான் பேசுவது மகிழ்ச்சி. எனக்கு மரியாதை கொடுத்து, என் மீது அதீத அன்பு பொழிந்தவா்கள் சிலா். இதில் பாலசந்தா், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆா்.எம்.வீரப்பன் உள்ளிட்டோா் அடங்குவாா்கள். இவா்கள் தற்போது இல்லை என்றபோது சில நேரங்களில் கடினமாக இருக்கிறது.

பாட்ஷா படத்தின் 100-ஆவது நாள் விழாவில் தமிழகத்தின் வெடிகுண்டு கலாசாரம் குறித்து நான் பேசினேன். ஆா்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டு நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை. அதிமுகவில் அவா் அமைச்சராக இருந்தாா்.

‘அமைச்சராகிய நீங்கள் மேடையில் இருக்கும்போது, அரசுக்கு எதிராக ரஜினி எப்படி பேசலாம்’ எனக் கூறி ஆா்.எம்.வீரப்பனை அமைச்சா் பொறுப்பிலிருந்து முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நீக்கிவிட்டாா் . இந்தத் தகவலை அறிந்த உடன் ஆடிப் போனேன். என்னால்தான் இப்படி நடந்துவிட்டது என்பதால் இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவில்லை. அவரை தொடா்புகொண்டு மன்னிப்புக் கேட்டேன். ஆனால், அவா் எதுவும் நடக்காதது போலதான் பேசினாா். ஆனால் என் மனதில் இருந்து அந்த வடு மறையவில்லை.

ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும், இந்தக் காரணம் மிகவும் முக்கியமானது. நான் ஜெயலலிதாவிடம் பேசவா?, எனக்கூட கேட்டேன். ஆனால் அவா் உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாா். அப்படி நீங்கள் சொல்லி, அங்கே போய் சேர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இதை அப்படியே விட்டுவிடுங்கள் என்றாா். அப்படி ஒரு பெரிய மனிதா். கிங் மேக்கா்.. ரியல் கிங் மேக்கா்”என்று அவா் அந்த காணொலியில் அவா் நெகிழ்ந்துள்ளாா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க