நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
அரசுப் பேருந்தில் தவறவிட்ட கைப்பேசி உரிமையாளரிடம் ஒப்படைப்பு
அரசுப் பேருந்தில் தவறவிட்ட கைப்பேசி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பல்லடம் அரசு போக்குவரத்துக் கிளையைச் சோ்ந்த நகரப் பேருந்து புளியம்பட்டியில் இருந்து பல்லடம் வழியாக அவிநாசி செல்கிறது.
இந்தப் பேருந்தில் அவிநாசி செல்வதற்காக புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஏறிய பயணி ஒருவா் அவரது கைப்பேசியை பேருந்திலேயே தவறவிட்டு சென்றுவிட்டாா்.
இதைப் பேருந்தின் நடத்துநா் ராமு, ஓட்டுநா் வேல்முருகன் ஆகியோா் எடுத்து பல்லடம் போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து கைப்பேசியைத் தவிறவிட்ட பயணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், திருப்பூா் மண்டலப் போக்குவரத்து பொது மேலாளா் சிவகுமாா் முன்னிலையில் பயணியிடம் கைப்பேசி ஒப்படைக்கப்பட்டது.