செய்திகள் :

Kerala: `டார்கெட் முடிக்காத ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல் இழுத்த கொடூரம்' - என்ன நடந்தது?

post image

கேரள மாநிலம் கொச்சியில் கெல்ட்ரா என்ற தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்நிறுவனத்துக்கு பல கிளைகள் உள்ளன. வீடுவீடாகச் சென்று பொருள்களை விற்பனைச் செய்யும் இந்த நிறுவனத்தில் இளைஞர்கள் அதிக அளவு வேலைசெய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொச்சி கலூர் ஜனதா சாலையில் உள்ள கிளையில் 2 ஊழியர்களை நாயைப் போன்று நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், இளைஞர்களின் ஆடைகளை அவிழ்த்து, நாயின் பெல்ட்டை கழுத்தில் கட்டியதுடன், முட்டிபோட்டு நாயைப் போன்று நடக்கவைத்துள்ளனர்.

வெளியான வீடியோ காட்சி

மேலும், தரையில் கிடந்த நாணயத்தை நாயைப் போன்று நக்க வைத்துள்ள காட்சியும் இடம்பெற்றுள்ளன. ஊழியர்களுக்கு அளிக்கப்படும் டார்க்கெட்டை முடிக்காமல் இருந்தால் இதுபோன்று கொடுமைபடுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி எர்ணாகுளம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாதிகாரிகளுக்கு கேரள தொழில்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி உத்தரவிட்டார்.

இதுகுறித்து எர்ணாகுளம் மாவட்ட லேபர் ஆபீசர் வினோத் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் அது 4 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது.

அதே சமயம் விடியோவில் இடம்பெற்றுள்ள ஊழியர்கள் புகார் அளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மாதம்தோறும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் எனவும். சிரித்துக்கொண்டேதான் ஊழியர்கள் அதை செய்ததாகவும் அதிகாரிகளிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோ வெளியானதில் வருத்தம் உள்ளதாகவும். மேனேஜிங் டைரக்டருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக முன்னாள் ஊழியர் மானஸ் என்பவர் வீடியோவை வெளியிட்டதாகவும். கம்பெனியில் இன்செண்டிவ் உள்பட மாதம் 18,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் அந்த வீடியோவில் உள்ள ஜெரின், ஹாசிம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகார் அளிக்கவில்லை எனவும். அதே சமயம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லேபர் ஆப்பீசர் வினோத் குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில், "கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே சமயம் இந்த சம்பவத்தில் தனிப்பட்ட சில முன்விரோதம் காரணமாக வீடியோ வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி 2 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி லேபர் ஆப்பீசருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட் திருப்திகரமாக இல்லை என்றால் ஐ.ஏ.எஸ் அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்படும்" என்றார்.

ஊழியர்களை நாயைப்போன்று நடத்திய வீடியோ

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகார் அளிக்கவில்லை எனவும். அதே சமயம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லேபர் ஆப்பீசர் வினோத் குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில், "கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே சமயம் இந்த சம்பவத்தில் தனிப்பட்ட சில முன்விரோதம் காரணமாக வீடியோ வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி 2 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி லேபர் ஆப்பீசருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட் திருப்திகரமாக இல்லை என்றால் ஐ.ஏ.எஸ் அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்படும்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு; போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாடை கட்டி, ஒப்பாரி போராட்டம் நடத்திய மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு பகுதியை சேர்ந்தவர் தீர்க்கரசு (54). விவசாயியான இவர் தனது நிலத்தை கிரயம் செய்து கொடுத்து, திருகுமார் என்பவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணம... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்பிலான நிலம் மோசடியா? - போராட்டத்தில் விவசாயிகள்- நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வள்ளிபுரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான 2.97 ஏக்கர் நிலம் மோகனமூர்த்தி, சரவணக்குமார் ஆகிய சகோதரர்கள் இருவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

`மேடம், தம்பியை விட்டுருங்க ப்ளீஸ்'- போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு துர்கா (31), மேனகா (29), கிருத்திகா (27), தினேஷ் (25) என நான்கு பிள்ளைகள். இந்த நிலையில் மது விற்பனை தொடர்ப... மேலும் பார்க்க

`பொம்மை தரேன்’ - 10 வயது சிறுமி, சிறார்வதை செய்யப்பட்டு 6வது மாடிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்

மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இரவு திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. உடனே கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியில் வந்து என்னவென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். இதில் 10 வய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மக்கள் ஏமாந்தது அவர்களுக்கே தெரியவில்லை!’ - `கோ ஃப்ரீ சைக்கிள்’ மோசடி குறித்து போலீஸ்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட `கோ ஃபிரீ சைக்கிள்’ (Go Free Cycles) என்ற சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தன்னுடைய அலுவலகத்தை திறந்தது. அதே வேகத்தில், `புதுச்சேரி வரும் சுற்ற... மேலும் பார்க்க

கோவை: பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 2 ஆண்கள்; விசாரணையில் வெளியான பின்னணி என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (54) மற்றும் மகேஷ் (45). இருவரும் இணைந்து கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாள்களாக பேக்கரி திறக்கப்படவி... மேலும் பார்க்க