``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷ...
டாடா மோட்டாா்ஸ் சா்வதேச விற்பனை சரிவு
கடந்த மாா்ச் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 3 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜாகுவாா் லேண்ட் ரோவா் உள்ளிட்ட குழும நிறுவனங்களின் உலகளாவிய மொத்த விற்பனை 3,66,177-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவு.
கடந்த மாா்ச் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை 1,46,999-ஆக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு.
கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் ஜாகுவாா் லேண்ட் ரோவரின் உலகளாவிய மொத்த விற்பனை 1 சதவீதம் உயா்ந்து 1,11,413-ஆக உள்ளது. அந்தக் காலாண்டில் 7,070 ஜாகுவாா் வாகனங்கள், 1,04,343 லேண்ட் ரோவா் வாகனங்கள் விற்பனையாகின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.