ரயிலில் வந்து இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது: 34 வாகனங்கள் பறிமுதல்
பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியேற்றம்; ஒருநாள் சஸ்பெண்ட்
சென்னை: டாஸ்மாக் விவகாரம் குறித்து அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளைகளைக் காட்டியதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்வதாகவும் அப்பாவு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள், டாஸ்மாக் விவகாரம் குறித்து அவையில் பேச அனுமதி கோரினர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்களை கையில் வைத்திருந்த பதாகைகைளை காட்டியதால், அவைக் காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.
மேலும், பேரவையிலிருந்து அதிமுகவினர் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அப்பாவு அறிவித்துள்ளார்.