சென்னை விமான நிலையத்தில் ரூ.1.8 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் நேருவின் சகோதரரின் வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் கே. என். நேருவின் மகனும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் கே. என். நேருவின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
கேரளம் மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் நேருவின் சகோதர்கள், சகோதரி, மகன் வீடுகளிலும் சோதனை நடைபெற்றும் வரும் நிலையில் அமைச்சர் நேரு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இதையும் படிக்க: தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு