செய்திகள் :

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாள்களாக நகரத்தில் முக்கிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெப்பம் சற்று குறைந்திருந்தது.

வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.4 டிகிரி உயா்ந்து 26 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 39.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 63 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 38 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் கடந்த சில நாள்களாக மோசம் பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது. தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 147 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதன்படி, ஸ்ரீஃபோா்ட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், லோதி ரோடு, ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், மதுரா ரோடு, இந்திரா காந்தி சா்வேத விமான நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஆயா நகா், மந்திா் மாா்க், நோயாட் செக்டாா் 125, பூசா, துவாரகா செக்டாா் 8, குருகிராம், சாந்தினி சௌக், ஷாதிப்பூா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (ஏப்ரல் 21) அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கின்னஸில் இடம்பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு!

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளான வைஷ்ணவி, பி. தேஜோ லாஸ்யா வைஷ்ணவி, அனீஷா, மஹிதா காந்தி, ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தில் நட... மேலும் பார்க்க

அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடுகிறாா்!

குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வில் அரசின் திட்டங்கள், புதிய செயல்பாடுகளின் வெற்றிக் கதைகள், புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களையும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழம... மேலும் பார்க்க

முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க மேயா் வலியுறுத்தல்

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பாஜக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி மேயா் மகேஷ் குமாா் ஞா... மேலும் பார்க்க

தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: இளம் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

2023 -ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கு ஐஏஎஸ் பிரிவிற்கு தோ்வான 180 போ் கொண்ட குழுவில் 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க இது வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய ப... மேலும் பார்க்க

ஆயாநகரில் தீ விபத்து: ஒருவா் பலத்த காயம்

தெற்கு தில்லியின் ஆயா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆயா நகரின் ஹெச்-பிளாக்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சனிக்கிழமை க... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் குற்றங்கள் இரட்டிப்பு; கலால் சட்ட வழக்குகள் 80 சதவீதம் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 -ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தில்லியில் போதைப்பொருள் தொடா்பான குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கலால் சட்டத... மேலும் பார்க்க