செய்திகள் :

வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சிறைத் தண்டனை விதித்த கோர்ட்!

post image

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ராஜேஷ்குமார்.  இவர் காங்கிரஸ் இளைஞராணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். கருங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தபோது பொது மக்கள் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். கருங்கல் அருகே உள்ள மிடாலம் பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள்  2013-ம் ஆண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அதற்கு அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவரான ராஜேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மிடாலம் பகுதிக்கு நேரில் சென்று வீடுகளை அகற்றுவதை தடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை விசாரித்த போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றபத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்த வழக்கில்  நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், வருவாய்த்துறை அதிகாரிகளை மிரட்டிய ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ மற்றும் மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஆமோஸ், சுபிதா ஆகியோருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் தலா 100 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தரப்பில் கூறுகையில், "கிள்ளியூர்  சட்டமன்ற தொகுதி,மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட, மிடாலம் 'பி' வில்லேஜ், பிச்சவிளை என்னும் பகுதியில் களம் புறம்போக்கு பகுதியில் ஏழை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்தனர்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ

அவர்கள் ஏற்கனவே கர தீர்வை, வீட்டுவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.2013 -ம் ஆண்டு அந்த ஏழை குடும்பங்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து ஜேசிபி வைத்து வீடுகளை இடிக்க அரசு அதிகாரிகள் வந்தனர். மனிதாபிமானமற்ற அரசு அதிகாரிகளின் செயலை கண்டித்து மக்களுடன் சேர்ந்து போராடிய போது காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தான் இந்த வழக்கில் உண்மை நிலை" என்றனர்.

இந்தி திணிப்பு: "மகாராஷ்டிராவில் அஞ்சும் பட்னாவிஸ்; மோடி பதிலளிக்க வேண்டும்" - ஸ்டாலின் ட்வீட்!

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிக்கப்பட்டதாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பின.பின்னர், "மும்மொழிக் கொள்கையின்படி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு மொழிகள் இ... மேலும் பார்க்க

Adyar park: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த பூங்காவை சீரமைக்கும் அதிகாரிகள்

சென்னை அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளபெருநகர மாநகராட்சி பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் ஒன்று கூட பயன்படுத்தும் நிலை... மேலும் பார்க்க

"கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்" - உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து CPIM மேல்முறையீடு!

தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பெ.... மேலும் பார்க்க

Pope: 'அடுத்த போப் யார்? - தேர்வு முறை எப்படி நடக்கும் தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அடுத்த போப் யார்? என்ற கேள்வி எழுகி... மேலும் பார்க்க

Vande Bharat: `வழக்கமான என்ஜின்களை விட இலகுவாக இருக்கிறது' - ரயில்வே பாதுகாப்பு ஆணைய அறிக்கை

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய ரயில்வேயின்முதன்மை ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்,கால்நடைகள்மோதும்போதுகூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகிறது என ரயில்வே பாதுகாப்பு அறிக்கை தெரிவ... மேலும் பார்க்க

"நிதியும், அதிகாரமும் இருப்பவரிடம் கேளுங்கள்; என் துறையில் இல்லை" - சட்டமன்றத்தில் PTR ஓப்பன் டாக்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த கேள்விக்கு, எங்களிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாகப் பத... மேலும் பார்க்க