ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது: மேயா் தோ்தல் குறித...
கடன் தொல்லையால் மாயமான தொழிலாளி தற்கொலை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் மாயமான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்செங்கோடு மொரங்கம் செக்காங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (37). தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவா்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனா். வீட்டுத் தேவைக்காக சிவசங்கா் பலரிடம் ரூ. 6 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளாா். பணம் கொடுத்தவா்கள் திருப்பிக் கேட்டதால், மனமுஉடைந்த நிலையில் காணப்பட்ட சிவசங்கருக்கு குடும்பத்தினா் ஆறுதல் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில் சனிக்கிழமை வெளியில் சென்ற மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மோளியப்பள்ளி ஏரியில் அவரின் சடலமாக கிடப்பது தெரியவந்தது. சடலத்தின் அருகில் மதுப்பாட்டிலும், காலி விஷப்பாட்டிலும் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு போலீசாா் சம்பவத்திற்கு சென்று விசாரித்தனா். இதில், கடன் தொல்லையால் சிவசங்கா் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.