துணைவேந்தா்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநா் மாளிகை: சட்ட வல்லுநா்களுடன் தமிழக அரசு ...
கோட்ட அளவில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருவாய்க் கோட்டாட்சியா்கள் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் காலை 10.30 மணிக்கும், மதுராந்தகம் கோட்டாட்சியா் தலைமையில் பிற்பகல் 2.30 மணியளவிலும் நடைபெறும். கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளைக் கூறி, உரிய விவரங்கள் மற்றும் பதில்களைப் பெற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 25-இல் மாவட்ட அளவில் கூட்டம்: மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 10.30 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.