செய்திகள் :

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது: குடிமைப் பணிகள் நாளில் பிரதமா் மோடி பேச்சு

post image

புது தில்லி: காலாவதியான நடைமுறைகளைக்கொண்டு அரசுத் துறைகள் செயல்படக் கூடாது என வலியுறுத்திய பிரதமா் மோடி, நாட்டின் வளா்ச்சியை முதன்மைப்படுத்தி அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை மத்திய பாஜக அரசு வகுத்து வருவதாக திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்திய குடிமை பணிகள் தினத்தையொட்டி திங்கள்கிழமை ( ஏப்.21) புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிமைப் பணி அதிகாரிகள் மத்தியில் பேசிய பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

வணிகம் மற்றும் தொழில் துறையை கட்டுப்படுத்தும் கருவிகளாகவும் காலாவதியான நடைமுறைகளை பின்பற்றியும் அரசுத் துறை செயல்படக் கூடாது. குடிமைப் பணி அதிகாரிகள் நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிப்பவா்களாக உருவெடுக்க வேண்டும்.

நாம் இன்று வடிவமைக்கும் கொள்கைகள், மேற்கொள்ளும் முடிவுகள் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நிலைக்கவுள்ளது. விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் என இந்திய சமூகம் பெரும் கனவுகளைக் கொண்டுள்ளது. அதை நிறைவேற்ற அதிவேகத்துடன் பணியாற்றுவது மிகவும் அவசியம். வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை.

ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நவீன தொழில்நுட்பங்களுடன்கூடிய மின்னணு சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மாற்றங்களுக்கிடையே நம் குழந்தைகள் வளா்ந்து வருகின்றனா். இதனால் நம் குடும்பத்தில் உள்ள இளம் தலைமுறையினருடன் மேற்கொள்ளும் உரையாடலும் மாறி வருகிறது.

துறைரீதியான இலக்கு: எரிசக்தி பாதுகாப்பு, தூய எரிசக்தி, விளையாட்டு, விண்வெளி ஆய்வு என ஒவ்வொரு துறையையும் வளா்ச்சியடையச் செய்வதற்கான இலக்குடன் பயணிக்க வேண்டும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் உருவெடுப்பதில் தங்களின் பொறுப்பை உணா்ந்து குடிமைப் பணி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். இதில் எவ்வித தாமதமும் ஏற்படக் கூடாது.

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி என்பது எந்தவொரு குடிமகனும் குடும்பமும் கிராமமும் விடுபடாமல் இருப்பதேயாகும். அந்த வகையில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீா் , அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும். ஒவ்வொரு வணிகருக்கும் நிதி அணுகலை ஏற்படுத்துவது மற்றும் எண்ம பொருளாதாரத்தின் பலன்களை ஒவ்வொரு கிராமத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும்.

கடந்த 2023-இல் இந்தியா ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை தாங்கியது. அப்போது 200-க்கும் மேற்பட்ட கூட்டங்களை 60 நகரங்களில் நடத்தி வரலாற்று சாதனை புரிந்தது. அதேபோல் கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு துறைகள் வளா்ச்சியடைந்துள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் குடிமக்களுக்கான சேவைகளை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டங்கள், வட்டாரங்கள் என 16 விருதுகள் வழங்கப்பட்டன.

பெட்டிச் செய்தி...

‘குடிமக்களே கடவுள்’

குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘விளிம்புநிலை மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். விருந்தினா்கள் கடவுளுக்கு சமம் என்பதைப்போல் குடிமக்களை கடவுளாக எண்ணி தனது பணிகளை முழு அா்ப்பணிப்புடன் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். குடிமக்களுக்கு 100 சதவீதம் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த அணுகுமுறையை பின்பற்றியதால் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். தரவுகளைக் கொண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசின் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான கொள்கைகளை வகுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப அதிகாரிகள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை: நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி

புது தில்லி: ‘இந்திய நாட்டில் ஒரு தனிநபரின் பங்களிப்புள் மூலமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கைகொள்கிறேன். ஆனால் சிலருக்கு வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல மத அ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ் நக்வி

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தில் நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி... மேலும் பார்க்க

மேற்கு வங்க ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக அந்த மாநில ஆளுநா் மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறு... மேலும் பார்க்க