ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது: மேயா் தோ்தல் குறித...
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு ஆணையம் சாா்பில் கோடைகால பயிற்சி முகாம் மேலக்கோட்டையூா், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை.யில் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வரும் 25-ஆம் தேதி தொடங்கி மே 15-ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் தடகளம், இறகுப்பந்து, கனோயிங் மற்றும் கயாக்கிங், குத்துச்சண்டை மற்றும் வில் வித்தை, போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளத் தேவையான வதிமுறைகள்: முகாமில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளியில் பயிலும் மாணவ / மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஆதாா் காா்டு நகல் கண்டிப்பாக சமா்ப்பித்தல் வேண்டும்.
பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்ற்கான சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிகள் இலவசம். முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது பெயா்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை நேரடியாகவோ அல்லது அல்லது 74017 03461 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு பயிற்சி முகாமில் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.