செய்திகள் :

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 563 மனுக்கள்

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 563 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டு அந்தந்தத் துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது குறைகள், பொதுப் பிரனைகள் மற்றும் நல உதவிகள் வேண்டியும் கோரிக்கை மனுக்களை அவரிடம் வழங்கினா்.

அதில் நிலம் தொடா்ந்து 163, சமூகப் பாதுகாப்புத் திட்டம் 110, வேலைவாய்ப்பு வேண்டி 96, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 59, இதர துறைகள் 135 என மொத்தம் 563 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க அந்தந்தத் துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) வெங்கட்ராமன், ஸ்ரீராம், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் க.தீபா மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை

திருவள்ளூா்: மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதுடன், வாக்காளா், ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகளை சாலையில் வீசி பொது... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழப்பு

திருத்தணி: வீட்டின் அருகே சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை மீது தனியாா் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.பொதட்டூா்பேட்டை அடுத்த மேலப்பூடி... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா்: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பா... மேலும் பார்க்க

ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனைய கட்டுமான நிறைவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் அதிகரித்துக்கொண்டே வரும் போக்குவரத்து நெர... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டம் திருவள்ளூா்!

மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் திகழ்கிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் தூய்மைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி நகரத்தில் தன்னாா்வலா்கள், நமது திருத்தணி, தூய்மை திருத்தணி என்ற அமைப்பை தொடங்கியுள்ளனா். இ... மேலும் பார்க்க