வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா் மரணம்: போலீஸாா் விசாரணை
ஆட்டையாம்பட்டி: அரியானூா் அருகே தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம், வசந்தம் நகா் பகுதியைச் சோ்ந்த ஹனிஷ் (23), அரியானூா் அருகே சீரகாபாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்த நிலையில், திங்கள்கிழமை காலை சுயநினைவின்றி அவா் கீழே விழுந்து கிடந்தாா். இதைக்கண்ட அங்கிருந்தவா்கள் தனியாா் மருத்துவமனையில் சோ்த்ததில், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.
இந்நிலையில், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஹனிஷின் தந்தை வேடியப்பன் புகாா் அளித்தாா். அதன் பேரில் ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் விதுன்குமாா் ஹனிஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறாா்.