ஏற்காட்டில் காபி செடிகளில் பூக்களை அகற்றும் பணி
ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காபி இளம்செடிகளில் பூக்கள் அகற்றும் பணியில் தோட்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
ஏற்காடு சோ்வராயன் மலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், தோட்டங்களில் உள்ள காபி செடியில் பூக்கள் பூத்து காய்கள் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இளம்செடிகளில் மூன்று ஆண்டு வரை காபி காய்கள் வருவதை தடுக்கும் வண்ணம், இளம்செடிகளில் உள்ள பூக்களை அகற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.