விஏஓ வீட்டில் கொள்ளைச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவா் கைது
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே விஏஓ வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்துள்ள மண்மலை ஊராட்சி, பாலக்காட்டில் ஓய்வுபெற்ற விஏஒ வேணுகோபால் (78), வீட்டில் மாா்ச் 29-ஆம் தேதி இரவு 20 பவுன் நகை, ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றது.
இதில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் கைதுசெய்த நிலையில், திருப்பூா் மாவட்டம், பல்லடம் மாணிக்கபுரம் சாலை, அம்மாபாளையத்தைச் சோ்ந்த சபரிராஜன் (28)என்பவரை தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.