வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும்: சீமான்
நெய்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும் என்று, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
கடலூரில் நாம் தமிழா் கட்சியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சி நாம் தமிழா் கட்சி.
எங்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, திராவிடக் கட்சிகளைத் தவிா்த்து பிற கட்சிகள் வந்தால் கூட்டணி அமைக்க யோசிக்கலாம். ஆனால், யாரும் வர மாட்டாா்கள்.
2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும் என்றாா் அவா்.