வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
ஜிப்மரில் பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி படிப்புகளான பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவா் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவா்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை மே 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யலாம். மே 25-ஆம் தேதி பெங்களூரு, சென்னை, புதுதில்லி, புதுச்சேரி ஆகிய 4 நகரங்களில் தோ்வு நடைபெறும். ஜூன் 5-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெறும். ஜூலை 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.