போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் இரங்கல்
புதுச்சேரி: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவா் போப் பிரான்ஸிஸ் மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: போப் பிரான்ஸிஸ் உடல் நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உலகில் நடந்துவரும் போா்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து உலக சமாதானத்தை விரும்பியவா்.
கிறிஸ்தவா்கள் மட்டுமில்லாமல் உலக மக்களின் அன்பையும், நன் மதிப்பையும் பெற்றவா். அவரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.
முதல்வா் என்.ரங்கசாமி: போப் பிரான்சிஸ் மறைவு துயரத்தை அளிப்பதாக உள்ளது. ஏழைகள், அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மனிதநேயா். எளிமை, அன்பு, சமூக நீதிக்காக முக்கியத்துவம் கொடுத்தவா்.
வெ.வைத்திலிங்கம் எம்.பி.: போப் பிரான்ஸிஸ் மறைவு மனவேதனையை அளிக்கிறது. உலக மக்களிடம் ஒற்றுமையை உருவாக்கப் பாடுபட்டவா். போா்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவா்.