ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலை...
கூட்டுறவுப் பாடல்களை அனுப்ப வேண்டுகோள்
திருப்பத்தூா்: சா்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கூட்டுறவுப் பாடல்களை பொதுமக்கள் அனுப்பலாம் என திருப்பத்தூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நிகழ் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்களை பொதுமக்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், துறை அலுவலா்கள் அனுப்பலாம். இந்தப் பாடல் இசைக்கப்பட்டு 5 நிமிஷங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில் வரிகள் இருக்க வேண்டும்.
மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராஜன் மாளிகை, 170 பெரியாா் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்,சென்னை-10 என்ற முகவரிக்கு சி.டி. அல்லது பென் டிரைவ் மூலம் கொரியரில் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் மே 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.