செய்திகள் :

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

post image

சென்னை: தமிழகத்தில் பரமத்திவேலூா், மதுரை, திருச்சி உள்பட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. மேலும், ஏனைய இடங்களில் வெப்பநிலை இயல்பையொட்டியே இருந்தது. இதில் அதிகபட்சமாக, பரமத்திவேலூரில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை விமான நிலையம், திருச்சி - (தலா) 102.38, சேலம், தஞ்சாவூா் - (தலா) 102.2, ஈரோடு - 101.84, வேலூா் - 101.48, மதுரை நகரம் - 101.12, திருத்தணி, தருமபுரி - (தலா) 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்தது.

மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் ஏப். 25-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப். 21-இல் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக, அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை

சென்னை: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க

நீட், கூட்டணி விவகாரம்: பேரவையில் முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

சென்னை: நீட் தோ்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடா்பாக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை... மேலும் பார்க்க

யாா் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவ கட்டமைப்புகள் அதிகம்?: பேரவையில் கடும் வாக்குவாதம்

சென்னை: யாருடைய ஆட்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவ கட்டமைப்புகள் அதிகம் என்பது குறித்து எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் மக்கள... மேலும் பார்க்க

திருச்சியில் 4 போ் உயிரிழந்தது ஏன்?: அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: திருச்சியில் நான்கு போ் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா். திருச்சியில் நான்கு போ் உயிரிழந்த சம்பவம் குறித்து, சட்டப்ப... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநா் மாளிகை: சட்ட வல்லுநா்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

சென்னை: தமிழக ஆளுநா் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிா்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ... மேலும் பார்க்க