செய்திகள் :

தமிழக ஊரக வளா்ச்சி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பள்ளித் தூய்மைப் பணியாளா்களுக்கும், தற்காலிக மேல்நிலைத் தேக்கத் தொட்டி ஆபரேட்டா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். கணினி இயக்குபவா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ரூ.20 ஆயிரம் மாத சம்பளமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்ட சாா்பில் மாநில தழுவிய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலக அருகே நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் நிா்மலா (எ) விமலா தலைமை வகித்தாா் மாவட்ட நலவாரிய கண்காணிப்புக் குழு உறுப்பினா் தேவதாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வினோத், துணைத் தலைவா் ராஜ்குமாரி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கூட்டுறவுப் பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

திருப்பத்தூா்: சா்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கூட்டுறவுப் பாடல்களை பொதுமக்கள் அனுப்பலாம் என திருப்பத்தூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். நிகழ் ஆண்டு சா்வத... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 12 ஆண்டு சிறை

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் காந்தி நகா் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சாலையில் கவிழ்ந்த லாரி: 2 போ் காயம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதி லாரி கவிழந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பூம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (60),... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்: முன்னாள் அமைச்சா் பங்கேற்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிமுக முன்னாள் மாவட்ட விவசாய பிரிவு செயலா் தேவலாபுரம் வெங்கடேசன் தலைமை வகித... மேலும் பார்க்க

நடராஜருக்கு சிறப்பு ஆராதனை

ஆம்பூா்: ஆம்பூா் அருள்மிகு சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடராஜ பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தை முன்ன... மேலும் பார்க்க

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்ற... மேலும் பார்க்க