இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருள...
வேலகவுண்டம்பட்டி அருகே பாட்டியை கொலை செய்த பேரன்
பரமத்தி வேலூா்: பாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி மாணிக்கம்பாளையம் அருகில் உள்ள கொண்டாங்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவரது மனைவி பாவாயி (70). இவரது மகன் மோகன் (43). லாரி ஓட்டுநா். இவருக்கு 16 வயதில் மகன் உள்ளாா்.
இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை 16 வயது சிறுவன் தனது பாட்டி உண்டியலில் வைத்திருந்த சுமாா் ரூ. 7 ஆயிரம் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளாா். இது குறித்து பாவாயி தனது மகன் மோகனிடம் கூறியுள்ளாா். மோகன் தனது மகனை கண்டித்துள்ளாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து சிறுவன் ஆத்திரத்தில் பாட்டியைக் கத்தியால் வெட்டினாராம். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் விரைந்துவந்து அவரைக் காப்பாற்ற முயன்றனா். ஆனால் பாவாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் பாட்டியைக் கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவான சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.