பேரவையில் கடும் அமளி! அதிமுக வெளிநடப்பு!
டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, வரும் ஏப். 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழாக் கொண்டாடப்படும் என்று 110 விதிகளின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு,”நீங்கம் நினைத்த நேரத்தில் எல்லாம் பேச அனுமதி தர முடியாது ” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிக்க: போப் மறைவு: தமிழக தலைமைச் செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி!