சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்!
சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணி வீரர் டெவான் கான்வேயின் தந்தை உயிரிழந்தார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டெவான் கான்வே ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் இருப்பவர்.
இந்தநிலையில், அவரது தந்தை டெண்டான் மறைவைத் தொடர்ந்து அவர் நியூஸிலாந்துக்கு திரும்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கான்வேயின் குடும்பத்தார் நியூஸிலாந்துக்கு குடி பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெவான் கான்வேயின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணி வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ச் அணிக்கு எதிரான அட்டத்தில் கறுப்பு நிற ரிப்பன் அணிந்திருந்தனர்.
எனினும், அப்போது இதற்கான காரணம் என்னவென்று வெளியிடப்படாத நிலையில், சிஎஸ்கே அணி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் திங்கள்கிழமை(ஏப். 21) இரவு இந்த துயரச் செய்தியை பகிர்ந்து, இரங்கல் தெரிவித்துள்ளது.