ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை; காரணம் என்ன?
அடுத்த சீசனை நோக்கி நகரும் சிஎஸ்கே: அம்பத்தி ராயுடு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சீசனை நோக்கி நகர்வதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+; ஸ்ரேயாஸ், இஷான் சேர்ப்பு! முழு விவரம்..
அம்பத்தி ராயுடு கூறியதென்ன?
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சீசனை நோக்கி நகர்வதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடவில்லை. ஏழு ஓவர்களில் சிஎஸ்கே வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்றைய டி20 கிரிக்கெட்டில் யாரும் இப்படி விளையாடுவதில்லை. கிரிக்கெட் வளர்ந்துவிட்டது. மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாட வேண்டும். ஆனால், மிடில் ஓவர்களில் சிஎஸ்கே சிறப்பாக விளையாடவில்லை. போட்டிகளில் தோல்வி அடையலாம். ஆனால், போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடி தோற்க வேண்டும். மும்பை ஆடுகளத்தில் குறைந்தபட்சம் 190 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும். ஆனால், சிஎஸ்கே அதற்கும் குறைவான ரன்களையே எடுத்தது.
இதையும் படிக்க: இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கம்!
இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவார்களா எனத் தெரியவில்லை. அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியும் கூட போட்டி நிறைவடைந்த பிறகு இதனைக் கூறினார். சிஎஸ்கே அடுத்த சீசனை நோக்கிச் செல்கிறது. அணியில் உள்ள இளம் வீரர்களை வளர்த்து, அவர்களை அடுத்த சீசனுக்கு தயார் செய்வதாக நினைக்கிறேன். வீரர்கள் நேர்மறையாக விளையாட வேண்டும். ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுக்கு அனைத்துப் போட்டிகளிலும் வாய்ப்பளிக்கலாம் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.